கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நுழைந்தது. அந்த யானை பொதுமக்களை துரத்தியது. இந்த நிலையில் யானை பின்னால் வருவதை பார்த்ததும் ஓடி வந்த சிறுவன் கால் தவறி கீழே விழுந்தான். நொடியில் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து ஓடியதால் நூலிழையில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு வெடித்து யானையை காட்டுப்பகுதிக்குள் வெரட்டி அடித்தனர். யானை ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.