
நாட்டில் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி பல புதிய மாற்றங்கள் அமலாகும். அந்த வகையில் நாளை ஜனவரி 1ஆம் தேதி புது வருடத்தை முன்னிட்டு அமலாகும் புதிய மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று சிலிண்டர் விலையில் மாற்றம் வரும். அதன் பிறகு இ வே பில் கட்டுப்பாடுகள் முறையில் புதிய மாற்றம் வர உள்ளது. அதாவது தாய்லாந்து நாடு உலகளாவிய இ விசா தளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி www.thaievisa.go.th அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் உட்பட உலக அளவில் உள்ள பயணிகள் ஆன்லைன் மூலம் விசா பெரும் நடைமுறையை எளிதாக்கிக் கொள்ளலாம்.
ஜனவரி 1ஆம் தேதி முதல் சில குறிப்பிட்ட ஃபோன்களில் whatsapp செயலி இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது பழைய பதிப்புகளின் அடிப்படையில் whatsapp இயங்காது. குறிப்பாக Samsung galaxy S3, S4 mini, note 2, Moto g, Moto razar HD, Moto E 2014, LG Nexus, LG G2 mini, Sony Xperia z, SP, V, HTC 1x,1x+ஆகிய போன்களில் whatsapp இயங்காது என்று கூறப்படுகிறது. இதே வித மே 5-ம் தேதி முதல் iOs 15.1 மற்றும் பழைய பதிப்புகளை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு ரிசர்வ் வங்கி சமீபத்தில் விவசாயிகள் வங்கிகளில் 2 லட்சம் வரையில் unsecured கடன் பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து NSE பங்குச்சந்தை தன்னுடைய expiry தேதிகளில் மாற்றம் செய்துள்ள நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன் பிறகு இபிஎஃப்ஓ பிஎப் பணத்தை ஏடிஎம் மூலமாக எடுக்கும் வசதியை 2025 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் வருமான வரிகயிலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது.
மேலும் சாதாரண செல்போன் பயன்படுத்துபவர்களுக்காக UPI 123 pay செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மூலமாக யுபிஐ பண பரிவர்த்தனையில் இதுவரை அதிகபட்சமாக 5000 ரூபாய் வரைதான் அனுப்பும் வசதி இருந்தது. இதனை ரிசர்வ் வங்கி சமீபத்தில் 10,000 ரூபாயாக உயர்த்தியது. இதனால்இன்று முதல் யுபிஐ மூலமாக ஒரு பயனாளருக்கு ரூ.10,000 வரையில் பணத்தை அனுப்ப முடியும்.