சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 17 வயது சிறுமி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி உட்பட அந்த பள்ளியில் படிக்கும் 14 மாணவிகளை திருச்சியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 25ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மாணவிகள் திரும்பினர். மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து நிலையில் 17 வயது சிறுமி தன்னை அழைத்து செல்ல தந்தை வந்துவிடுவார் என்று கூறி வெளியே வந்துள்ளார். அந்த மாணவி நீண்ட நேரமாக அங்கு நின்று கொண்டிருந்த நிலையில் அதனை பார்த்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று மாணவியிடம் கேட்டு வீட்டிற்கு கொண்டு போய் விடுவதாக கூறி தன் பைக்கில் ஏற்றி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வேறொரு வீட்டிற்கு அவர் அழைத்து சென்று கட்டாயப்படுத்தி கூல்ட்ரிங்ஸ் குடிக்க வைத்த நிலையில் அங்கு மற்றொருவரும் இருந்தார்.

அந்த நபரின் பெயர் பைசல் கான். இவர் மாணவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதே போன்று அந்த மாணவியை அழைத்து சென்ற ரித்தீஷ் குமார் என்பவரும் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால் பின்னர் அனுப்பியுள்ளார். இதற்கிடையில் மாணவியை தேடி தந்தை அங்கு செல்ல நிலையில் தன் மகளை காணாமல் தேட அந்த மாணவியோ தாமதமாக வீட்டிற்கு சென்று விவரங்களை பெற்றோரிடம் கூற அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் பைசல் கானை மட்டும் கைது செய்த நிலையில் ரித்தேஷ்குமாரை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாதர் சங்கத்தின் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மாணவிக்கு அந்தரங்க உறுப்பு சிதைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியை பைக்கில் வாலிபர் அழைத்துச் செல்வதும் பின்னர் அவர் மட்டும் தனியாக வருவதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.