உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் புத்தாண்டின் முதல் நாளில் குடும்பத்தையே வாலிபர் கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லக்னோவில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் குடும்பம் புத்தாண்டை கொண்டாட ஆக்ராவுக்கு சென்று அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்கள் இன்று காலை ஹோட்டலில் சடலமாக கிடந்துள்ளனர். அதன்படி தாய் அஸ்மா மற்றும் அவருடைய மகள்கள் அலியா (9), அக்ஷா (16), ரஹீமான் (18), அலிஷீயா (19) ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கொலை செய்ததை அர்ஷத் ஒப்புக்கொண்டுள்ளார்.

தன்னுடைய தாய் மற்றும் சொந்த தங்கைகள் 5 பேருக்கு மது கலந்த உணவை  கொடுத்து அவர்களை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றுள்ளார். இவர்களை கொலை செய்த பிறகு தன்னுடைய குடும்பத்தினரின் உடல்களை காட்டி கொலை செய்ததற்கான காரணத்தை கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் அந்த வாலிபரை ‌ கைது செய்து உடல்களை மீட்டுள்ளனர். அதாவது போலி வழக்கில் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னுடைய தாய் மற்றும் தங்கைகளை ஹைதராபாத்துக்கு விற்க முயன்றதாகவும் தங்கள் வீட்டை பறிக்க முன்றதாகவும்  அவர்கள் தெருவில் சுற்றி திரிவதை பார்க்க முடியாது என்பதாலும் தான் அவர்களை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். தன் வீட்டின் அருகே வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்கள் மீதும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்ர். மேலும் நேற்று இரவு உணவில் மது கலந்து கொடுத்து தன்னுடைய தாய் மற்றும் சகோதரிகளை 22 வயது அர்ஷத் கொலை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.