பெங்களூருவில் சமீபத்தில் மனைவியின் தொல்லை தாங்காமல் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அவருடைய மனைவி மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பெங்களூருவில் மனைவியின் தொல்லை தாங்காமல் போலீஸ்காரர் ஒருவரும் அடுத்த தற்கொலை செய்து கொண்டார். தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது டெல்லியில் புனித் குரோனா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ‌Woodbix cafe நிறுவனத்தின் சிஇஓ. இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் விவாகரத்து பெற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் அந்த நிறுவனம் யாருக்கு சொந்தம் என்பதில் குரோனாவுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு இருந்துள்ளது.

இதில் மனிகா தன்னுடைய கணவரை மிரட்டும் 16 நிமிட வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென குரோனா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்திற்கு மனிகாவும் அவருடைய குடும்பத்தினரும் தான் காரணம் என்று குரோனாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் அவருடைய சகோதரி செய்தியாளர்களை சந்தித்தபோது உன்னால் எதுவும் செய்ய முடியாது முடிந்தால் தற்கொலை செய்து கொண்டு செத்து விடு என்று மணிகா மிரட்டியதாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய உடலை மீட்டு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.