
உலகம் முழுவதும் புது வருடம் பிறந்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு நடக்கப்போகும் சம்பவங்கள் குறித்தும் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டிராடாமாஸ் ஆகியோர் கணிப்புகள் பற்றி பார்ப்போம். அதன்படி பாபா கங்காவின் கணிப்புகள் படி, பேரழிவை ஏற்படுத்தும் போர் ஐரோப்பிய பகுதிகளில் ஏற்படும். ஐரோப்பிய கண்டங்களில் மக்கள் தொகை குறையும் நிலையில் ரஷ்யா தப்பி பிழைப்பதோடு உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும். அமெரிக்காவில் உள்ள மேற்கு கடலோர பகுதிகளில் நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்பு போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தும் இயற்கை பேரிடர்கள் நிகழும் என்று கணித்துள்ளார். அதன்பிறகு நாஸ்டிராடாமாஸ் கணிப்பின்படி, கடுமையான போர்களால் ஐரோப்பிய பகுதிகள் பாதிக்கப்படும். ஐரோப்பிய பகுதிகளில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் எதிரிகள் தாக்குதல் மேற்கொள்வார்கள்.
இதனையடுத்து கடுமையான மோதல்கள் மற்றும் பிளேக் நோய் போன்றவற்றால் இங்கிலாந்து பாதிக்கப்படும். பெரிய அளவில் கொள்ளை நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இது ஒரு கொடிய எதிரியாக இருக்கும். இதற்கிடையில் தொடர்ந்து நடைபெறும் போரால் வீரர்கள் சோர்ந்து போவதால் ஒரு போர் நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்படும். இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே உள்ள போரா அல்லது இஸ்ரேல் மற்றும் காசா இடைய நடைபெறும் போரா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதற்கிடையில் 2025 ஆம் ஆண்டு மனிதர்களுடன் ஏலியன்கள் தொடர்பு கொள்வார்கள் என்றும் ரஷ்ய அதிபர் புதின் மீது படுகொலை தாக்குதல் நடைபெறும் என்றும் இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.