
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்திவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என்று எதிர் காட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் சார் என்ற ஒருவருக்கும் வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் அதை அரசன் காவல்துறையும் மூடி மறைப்பதாகவும் கூறுகிறார்கள். இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இன்று பாமக கட்சியின் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது.
அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக கட்சியின் மகளிர் அணி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி தற்போது அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக கட்சியினரையும் அவர்கள் கைது செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.