
தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறை கீழ் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஒவ்வொரு அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களை EMIS தளத்தில் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன்படி இந்த ஆண்டுக்கான மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும்.