
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த நிலையில் எப்ஐஆர் லீக் ஆனது எப்படி என்று அதிருப்தி தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் சார் என்ற ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுகவினர், பாஜகவினர், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பாமக கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த அனுமதி வேண்டி பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் போராட்டம் நடத்த அனுமதி மறுத்த நிலையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அரசியலாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியது. அதன் பிறகு பெண்கள் பாதுகாப்பில் உண்மையாக கவனம் செலுத்தாமல் அரசியல் ஆக்கப்படுகிறது. போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கைவைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று சொல்லுங்கள் என்றது. மேலும் அனுமதி கேட்டு பாமக வழக்கறிஞர் கேட்டபோது அதற்கு நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.