
2019 ஆம் ஆண்டு உலக நாடுகளை அச்சுறுத்திய தொற்று கொரோனா. இதைப் பற்றி 2018 ஆம் ஆண்டு கணித்தவர் நிக்கோலஸ் அவுஜுலா. டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி வெற்றி, செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, நோட்ரே டேம் கதீட்ரலில் ஏற்பட்ட தீ, கோவிட் தொற்றுநோய் மற்றும் ரோபோ படைகளின் வளர்ச்சி போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை அவுஜுலா துல்லியமாக முன்னறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றுவரை, இந்த கணிப்புகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2025 ஆம் வருடம் குறித்த கணிப்புகளை நிக்கோலஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது 2025-ல் மூன்றாம் உலகப் போர் நிகழும் என்பது உறுதி. இரக்கமே இல்லாத ஆண்டாக இது இருக்கும். மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் கழுத்தை அறுத்துக் கொள்வார்கள்.
அரசியல் கொலைகள் நடக்கும். தீமை மற்றும் வன்முறையால் இந்த பூமி சிறைபிடிக்கப்படும். அதிகப்படியான மழை வெள்ளத்திற்கு வழிவகுக்கும், இந்த வெள்ளம், மில்லியன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக ஆக்கும். கடல் மட்டம் வேகமாக உயரும், முழு நகரங்களையும் மூழ்கடிக்கும் என்று அவுஜுலா கணித்துள்ளார்.