
சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு உடலில் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சேலையூர் இந்திரா நகரை சேர்ந்த சூர்யா(20) என்பது தெரியவந்தது.
அவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு பிறவியிலேயே காது கேட்காது. வாய் பேச முடியாது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சூர்யா குடிபோதையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது சூர்யா அவரது நண்பர்களான சபரி கணேஷ், ஐயப்பன், விஜய பிரதாப் ஆகியோருடன் இணைந்து மது குடித்துள்ளார்.
அப்போது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சபரி கணேஷ் இரும்பு பைப்பை எடுத்து சூர்யாவை அடித்துள்ளார். மேலும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் விஜயபிறதாப் சூர்யா மீது குழவி கல்லை போட்டுள்ளார். சூர்யா இறந்த பிறகு வீட்டில் இருந்த துணி மற்றும் பிளாஸ்டிக் கவர் களால் சூர்யாவின் உடலை கட்டி புதர் என நினைத்து சாலையோரம் வீசி சென்றது தெரியவந்தது. இதனால் ஐயப்பன், சபரி கணேஷ், விஜய பிரதாப் ஆகிய மூன்றுவரையும் போலீசார் கைது செய்தனர்.