ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பகுதியில் சுலைமான் அல் மஜித்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இங்கிலாந்தில் மருத்துவ கூட்டமைப்பில் தீவிர தொடர்பில் இருந்ததோடு, தர்ஹாம் கவுன்டி மற்றும் டார்லிங்டன் NHS அறக்கட்டளையிலும் மருத்துவராக இருந்துள்ளார். இவர் இளநிலை டாக்டர்களை பயிற்சி டாக்டர்களாக வகைப்படுத்தக் கோரியும், முறையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் கூட்டமைப்புடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக விமானம் ஒன்று வாடகைக்கு வாங்கியுள்ளார்.

இந்த விமானத்தில் சுலைமான் மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் 26 வயதான பெண் ஒருவரும் பயணித்துள்ளனர். இந்த விமானம் எப்படி பறக்கிறது என்பதை காண சுலைமான் தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரர் ஆகியோர் விமானம் நிறுத்தும் கிளப்பில் இருந்தனர். இந்த விமானம் புறப்பட்டு சில நிமிடத்தில் விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த இரண்டு பேரும் உயிரிழந்தனர். அதாவது இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த சிக்னல் தொடர்பை இழந்தது. இதனால் அவசரமாக தரையிறக்கம் செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து கழகம் விசாரணை நடத்தி வருகின்றது.