
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக டாஸ்மா கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் ஆகிய இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. இதைத்தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு அன்றைய தினமும் விடுமுறை. மேலும் மொத்தமாக தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.