பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கருணாநிதியிடம் அப்போது தம்பி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கன்னு நான் தான் சொன்னேன். திமுகவும் பாமக கட்சியும் கூட்டணியில் இருந்த போது செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டனர். அதாவது கருணாநிதியிடம் கூட்டணியிலிருந்து கொண்டு உங்களை பாமக தொடர்ந்து விமர்சிக்கிறது என்று கேட்டபோது அதற்கு அவர் தைலாபுரத்திலிருந்து தைலம் வருகிறது என்றார். எங்களுடைய விமர்சனங்களுக்கு கூட கலைஞர் நாசுக்காக பதில் கொடுப்பார். கலைஞரை கைது செய்து சிறையில் அடைத்த போது நான் அதிமுக கூட்டணியில் இருந்தேன். அந்த சமயத்தில் ஜிகே மணியிடம் ஒரு காரில் ஒரு நாற்காலியை வைக்குமாறு கூறிவிட்டு சிறைக்கு சென்று அவரை பார்த்தேன்.

ஆனால் என்னை சிறைக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் நாற்காலியை இங்கேயே போட்டு உண்ணாவிரத போராட்டம் இருப்பேன் என்று கூறினேன். அப்போது அவர் என்னிடம் இது எல்லாம் உங்களால்தான் நடந்தது நீங்கள் எங்களுடன் கூட்டணி வைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்று அர்த்தத்தில் என்னிடம் கூறினார். ஒரு பொதுக்கூட்டத்தின் போது எதற்காக இவ்வளவு பாரத்தை வைத்துள்ளீர்கள் துணை முதல்வர் பதவியை தம்பி ஸ்டாலினுக்கு கொடுங்கள் என்று கலைஞரிடம் நான் கூறினேன். நான் பலமுறை ஸ்டாலினிடம் கூறியுள்ளேன். உங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க சொன்னது நான்தான் என்று. மேலும் அதற்கு ஸ்டாலினும் ஆம் தான் அது உண்மைதான் ஐயா என்று என்னிடம் கூறியுள்ளார் என்றார்.