ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ராஜா பார்க் என்ற பகுதி இருக்கிறது. இங்கு நேற்று இரவு ஒரு சீக்கிய வழிபாட்டு ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்தது. சுமார் 300 பேர் அங்கு கூடி இருந்த நிலையில் ஒரு கார் திடீரென அங்கு நுழைந்தது. அந்த காரை ஒரு அரசு அதிகாரியின் மைனர் மகன் ஓட்டி வந்துள்ளான். இந்த விபத்தில் ஒரு முதியவர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விபத்து நடந்ததால் கோபத்தில் சீக்கியர்கள் அந்த கார் ஓட்டுநர் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்தினர். குறிப்பாக ஒருவர் அந்த காரின் பானட் மீது ஏறி அதனை உடைத்து சேதப்படுத்துகிறார். அந்தக் காரை அரசு அதிகாரியின் மைனர் மகன் ‌ ஓட்டிய நிலையில் அவனுடன் 3 சிறுவர்களுடன் இருந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் பின்னர் அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.