திமுக கட்சியின் எம்பி கனிமொழி இன்று தன்னுடைய 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சியினர் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக பிறந்தநாளில் திமுகவை எம்பி கனிமொழி வழி நடத்துவது போன்று போஸ்டர் ஒட்டி இருந்த நிலையில் தற்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‌ கனிமொழியை டீச்சர் ஆகவும் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, சீமான் மற்றும் விஜய் ஆகியோரை மாணவர்களாகவும் ஆட்சி போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

அதன் பிறகு இன்று திமுக நிர்வாகிகள் கனிமொழிக்கு கேக் வழங்கிய போது அந்த கேக்கை வெட்டும்போது அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். என்னையா பண்ணி வச்சிருக்கீங்க என்பது போல் கனிமொழியின் ரியாக்ஷன் இருந்தது. அதாவது பிறந்தநாள் கேக்கில் கனிமொழியை டீச்சர் போன்றும் அவரிடம் பாடம் படிக்கும் மாணவர்களாக விஜய், இபிஎஸ், சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியோரை சித்தரித்தும் கேக்கை உருவாக்கி இருந்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.