பீகார் மாநிலத்தில் அபண்டா என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஜிதேந்திர யாதவ் என்பவர் வசித்து வரும்  நிலையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதன் காரணமாக அவரை காவல்துறையினர் கைது செய்ய அந்த கிராமத்திற்கு சென்றனர். அப்போது அவரின் குடும்பத்தினரும் மற்றும் உள்ளூர் வாசிகளும் காவல்துறையினரை தடுத்து நிறுத்தினர். அவர்கள் பெரிய கற்களை வீசி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

அவருடைய வீட்டிற்கு வருவதை தடுப்பதற்காக அந்த பாதையில் டயர்களை போட்டு எரிக்கின்றனர். இதில் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பின்னர் அந்த இடத்தில் அதிக போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் ஜிதேந்திர யாதவ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜிதேந்திர யாதவை வரதட்சனை கொடுமை வழக்கில் காவல்துறையினர் கைது செய்ய சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.