டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கல்காஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிட இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்பி பிரியங்கா காந்தி பற்றி சர்ச்சையாக பேசிய நிலையில் டெல்லி முதல்வர் அதிஷி பற்றியும் சர்ச்சையாக பேசியுள்ளார். அதாவது பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல பளபளவென சாலைகள் அமைக்கப்படும் என்று அவர் கூறிய நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் அவர் வீட்டின் முன்பாக இன்று போராட்டம் நடத்தினர்.

இதேபோன்று அதிஷி பற்றி அவர் கூறும் போது, மார்லினாவாக இருந்த அதிஷி தற்போது சிங். தன்னுடைய தந்தையை கூட அவர் மாற்றிவிட்டார் என்று கூறினார். இதற்கு அரவிந்த் கஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் வெட்கமே இல்லாமல் பாஜக தலைவர்கள் அனைத்து எல்லைகளையும் தாண்டி பேசுவதாக விமர்சித்தார். இந்நிலையில் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிஷி, பாஜக வேட்பாளர் தந்தையை மாற்றியது குறித்து பேசியதற்கு மனமடைந்து அழுதுவிட்டார். அதோடு பாஜக அழுக்கு அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சித்தார். அதோடு தன்னுடைய தந்தையின் வயது மற்றும் உடல்நிலை பற்றியும் பேசினார்.

என்னுடைய தந்தை வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருந்தவர். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பல மாணவர்களுக்கு அவர் இலவசமாக பாடம் கற்பித்து கொடுத்த நிலையில் தற்போது அவருக்கு 80 வயது ஆகிறது. இப்போது அவர் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்று கண் கலங்கினார். தேர்தலுக்காக இப்படி கீழ்த்தரமாக பேசுவதா. ஒரு முதியவரை கூட மரியாதை இல்லாமல் தேர்தலுக்காக பாஜக திட்டும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்த நாட்டின் அரசியல் தலைகீழாக மாறும் என்று நான் நினைக்கவில்லை என்றார். இந்நிலையில் அதிஷியின் முழு அதிஷி பெயர் மார்லெனா சிங். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் பெயருக்கு முன்பாக உள்ள மார்லெனா சிங் என்பதை நீக்கிவிட்டார். மேலும் பொதுமக்கள் தன்னுடைய வேலையை பார்த்து தான் தன்னை தீர்மானிக்க வேண்டும் எனவும் பெயரை வைத்து தீர்மானிக்க கூடாது என்பதற்காகவும் பெயரை மாற்றியதாகவும் அவர் முன்னதாக விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.