
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோனூர் பகுதியில் முத்துலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிது வர்ஷினி(15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி துணியை கட்டி அதில் ஊஞ்சல் விளையாடி வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் ரீது வர்ஷினி ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த துணி சிறுமியின் கழுத்தை இறுக்கியது. இதனால் சிறுமி அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டனர். ஆனால் அதற்குள் ரிது வர்ஷினி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.