சென்னையில் புத்தாண்டு பிறந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை கடந்த 4-ம் தேதி சரிவை சந்தித்தது. அதன்பிறகு தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7215 ரூபாயாகவும், ஒரு சவரன் 57,720 ரூபாயாகவும் இருக்கிறது.

அதன்பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7871 ரூபாயாகவும், ஒரு சவரன் 62968 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 100 ரூபாயாகவும் 1 கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாயாகவும் இருக்கிறது.