
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் தொழிலதிபர் ராமலிங்கம். இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது.
அதன்படி அவருக்கு சொந்தமான Rccl நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இவருக்கு சொந்தமான நிறுவனம் ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையத்தில் உள்ளது. மேலும் வரி ஏய்ப்பு போல் நடந்துள்ளதா என்ற கோணத்தில் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.