
நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை அறிமுகத்தில் இருக்கிறது. இதனை பொதுமக்கள் தினசரி ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மெட்ரோ ரயில்களில் பயணிகளிடையே வாக்குவாதம் நடப்பது மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிகள் இடையே சண்டை, காதல் ஜோடிகளின் முத்த மழை, இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் ரீல்ஸ் எடுத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது. அதாவது சில பெண்கள் மெட்ரோ ரயிலில் தலை முடியை பிடித்து சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் ஒரு பெண் இருக்கை குறித்து கேட்கிறார். அப்போது மற்றொரு பெண் கோபமாக என் மடியில் உட்கார் என்கிறார். இதில் இரு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. அவர்கள் தலை முடியை படித்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram