
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரசித்தி பெற்ற ராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். இந்த கோவிலுக்குள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற நிலையில் அவர் கண்ணாடியில் கேமரா வைத்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த கூலிங் கிளாஸின் விலை மட்டும் 50 ஆயிரம் ரூபாய். மேலும் அவர் கூலிங் கிளாஸில் கேமரா வைத்து போட்டோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதன் காரணமாக அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.