தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவர்னர் ஆர். என். ரவி எழுந்து சென்றது குறித்து கூறிய அவர், கவர்னர் தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடந்து கொண்டார். இந்த உப்பு சப்பு இல்லாத காரணத்திற்கெல்லாம் திமுக போராட்டம் நடத்துகிறது. கவர்னரை எதிர்த்து போஸ்டர்கள் ஓட்டுகின்றனர் ஆனால் காவல்துறை இதனை கவனிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை திசை திருப்பவே திமுக முயற்சி செய்கிறது.

திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதி கிடையாது ஆனால் தேவையில்லாத வீண் காரணத்திற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதியா?. இடதுசாரி கட்சியினர் கூறுவது போல தமிழகத்தில் அவசர நிலை ஆட்சி முறையே நடைபெற்று வருகிறது. ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது சென்ற முறை மாதிரி  இல்லாமல் நேர்மையாக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியுடன் கலந்துரையாடி பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.