நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக பல நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என கூண்டோடு விலகும்  நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் விலகியுள்ளனர். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் உட்பட 32 நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் தாங்கள் கட்சியிலிருந்து விலகுவதற்கு சாட்டை துரைமுருகன் தான் காரணம் என்றும் சீமான் கட்சியில் இருக்கும் யாரையும் மதிப்பதில்லை எனவும் யார் பேச்சையும் கேட்பதில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள் அடுத்தடுத்து சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.