சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். ஆனால் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்று காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இன்று  சட்டசபையில் இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது எனவும் 90 நாட்களில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றம் மூலமாக குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் கூறினார். அதன் பிறகு சார் என்ற ஒருவர் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதன்பிறகு ஞானசேகரன் திமுக கட்சியை சேர்ந்தவர் கிடையாது என்று அமைச்சர்கள் பலரும் கூறிவந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்றும் அவர் நிர்வாகி கிடையாது எனவும் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்ததை வைத்து திமுகவை சேர்ந்தவர் என்று கூறி விட முடியாது என்றும் கூறினார். மேலும் இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஞானசேகர்களுக்கும் திமுகவினருக்கும் எந்த தொடர்பு இல்லை என அமைச்சர்கள் பேசிய வீடியோவையும் முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்று பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு இதோ,