
புதுச்சேரி மாநில தலைவர் தேர்வு செய்வது குறித்து பாஜக தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின் பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி மாநில தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு மேல் இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகம் முடிவெடுக்கும். பள்ளிக்கல்விக்காக மத்திய அரசு அதிக நிதிகளை ஒதுக்கி வருகிறது.
இருப்பினும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?. தமிழக அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி பாடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளிகளில் 3ஆவது பாடம் கற்பிக்கக் கூடாது என்பதுதான் சமூக நீதியா? அரசுப்பள்ளி மாணவர்கள் ஹிந்தி பாடம் கற்க முடியாதா? பணம் வாங்கிக் கொண்டு ஹிந்தி மொழியை கற்பிக்கும் தமிழக அமைச்சர்கள் அரசு பள்ளிகளில் மட்டும் 3ஆவது மொழியை மறுப்பது ஏன்? இதுதான் சமூக நீதி என்று திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.