
கன்னட மொழி படங்களில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் யாஷ். இவர் நடிப்பில் 2018 இல் வெளியான கேஜிஎப் இவரை இந்தியாவின் பான் ஸ்டார் ஆக்கியது. இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி பல கோடிக்கு வசூல் செய்தது. இதன் இரண்டாம் பாகம் 2022-ல் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில் நடிகர் யாஷ் “டாக்ஸிக்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ட்ரக் மாபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் ட்ராமா என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் யாஷ் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து டாக்ஸிக் பட குழு அவரது பர்த்டே ஸ்பெஷல் ஆக டாக்ஸிக் கிளிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோவில் நடிகர் யாஷ் கோட் சூட்டுடன் பப்பில் பியானோ வாசிப்பது போன்று வீடியோ வெளியாகியது. இந்த வீடியோ ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.