இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இம்மாதம் 29ஆம் தேதி இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட் கம்மின்ஸ் மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் காயமடைந்த ஹசில்வுட் ஆகிய இருவரும் தொடரில் இடம்பெறவில்லை.