
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு புல்லுவிளை பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் ஷாஜினும் காதலித்து வந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த மாணவி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஷாஜின் அவரிடம் பணம் கேட்டார். இதனால் அந்த மாணவி கையில் போட்டிருந்த தங்கம் மோதிரத்தை கழற்றி கொடுத்தார். அதனை அடகு வைத்து ஷாஜின் பணம் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மோதிரம் வேண்டும் என மாணவி கேட்டார்.
அதற்கு ஷாஜின் மோதிரம் வீட்டில் இருக்கிறது வா தருகிறேன் என கூறி அழைத்து சென்றார். அதன் பிறகு ஜூஸில் மாணவிக்கு மயக்கம் மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து மாணவியை மிரட்டி தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்தார். கடைசியாக தான் கேட்ட 2 லட்சத்தை தராததால் ஷாஜின் மாணவியின் ஆபாச படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாஜினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.