இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் ஜேம்ஸ் வாங்கிய லாட்டரிக்கு இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய் பரிசு விழுந்தது.

பரிசு விழுந்த மறுநாளே வழக்கம் போல ஜேம்ஸ் வேலைக்கு சென்ற வடிகால்களை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். அந்த பணம் மூலம் பெற்றோரின் கடனை அடைப்பது, வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வது, சொகுசு கார் வாங்குவது என ஜேம்ஸ் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளாராம். ஆனாலும் வேலைக்கு செல்வதை நிறுத்தப் போவதில்லை என ஜேம்ஸ் கூறியுள்ளார்