வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹாசன். இவரை செக் மோசடி வழக்கில் கைது செய்ய தற்போது டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஷேக் ஹசினா ஆட்சிக்காலத்தின் போது எம்பி ஆக பதவி வகித்தவர். இவர் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு இதுவரை சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை.

இந்நிலையில் தற்போது அவரை கைது செய்ய வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோட அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.