
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவரது நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்தப் படம் உலக அளவில் 2000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனை படைத்த படமாக வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் மராட்டிய ராணி ஆக நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இதில் தனது காலில் அடிபட்டதையும் பொருட்படுத்தாமல் நடிகை ராஷ்மிகா கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய அவர், இது போன்ற கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு படக்குழுவிற்கு மிகவும் நன்றி. மராட்டிய ராணி யேசுபாயாக நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் ஆகும். இந்தப் படத்தோடு சினிமா வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றால் கூட எனக்கு மிகவும் சந்தோஷம்தான் என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.