டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அதிஷி  செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே டெல்லியின் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பாஜக பணம், நகை, சேலைகள் வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே வேலை வாக்கு விலைமதிப்பற்றது. அவர்கள் கொடுக்கும் 1100 ரூபாய்க்கு வாக்கை விற்று விடாதீர்கள் என்றும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, பாஜகவினர் உங்களுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்களுடைய பணம். ஆனால் உங்கள் வாக்கை 1100 ரூபாய்க்கு பணத்திற்கோ, சேலைக்கோ விற்று விடாதீர்கள் உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது. உங்கள் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டால் நமது ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும், அது செல்வந்தர்கள் ஆள வழி வகுத்து விடும். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், ஆனால் பணம் கொடுக்கும் நபர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்றனர்.