
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிஐ ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த கிரிக்கெட் அணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்குகிறது. அதன்படி ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அணிகள் மற்றும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் டி20 போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதினை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்,பாக். வீரர் பாபர் அசாம், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், ஜிம்பாவே வீரர் சிக்கந்தர்ராசா ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விடுதலை வென்றுள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டில் மட்டும் இவர் 18 போட்டிகளில் கிட்டத்தட்ட 36 விக்கெட் வரை வீழ்த்தியுள்ளார்.