
தற்போதைய நவீன யுகத்தில் டிஜிட்டல் பரிமாற்றங்களின் உபயோகம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பணம் கொடுத்து பரிவர்த்தனை செய்வதை விட பலர் g-pay, phone pay போன்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். அதோடு பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்த QR code ஸ்கேன் செய்யும் போது வங்கி சர்வர் பிரச்சனை காரணமாக பணம் செலுத்த முடியாமல் போகின்றது. இந்த மாதிரியான நிகழ்வுகளை சமாளிக்க புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது UPI செயலிகள் ஒரு வங்கியிலிருந்து பணம் பெற்று மற்றொரு வங்கிக்கு மாற்றக்கூடிய கட்டமைப்பை கொண்டதாகும்.
இந்த செயல்முறையை மேற்கொள்ளும் வங்கி சர்வர்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சரியாக இயங்கவில்லை என்றால் உங்களது பரிவர்த்தனை வெற்றி பெறாது. இதனை தவிர்க்க UPI- lite என்ற வசதியை G-pay நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதோடு UPI lite செயலியின் வாலட்டை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்வதன் மூலம் உங்களின் வங்கி சர்வர் சரியில்லை என்றாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து UPI lite- ல் ஒரே நாளில் அதிகபட்சமாக 4000 வரை உபயோகம் செய்து கொள்ள முடியும். இறுதியாக இந்த செயலியின் மூலம் நமது வங்கியில் இருந்து எடுத்த பணத்தை மீண்டும் வங்கி கணக்கிற்கு மாற்ற இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.