
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் விஜய்க்கு தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தற்போது விஜய் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் விஜயின் கடைசி படமாகும். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதால் தளபதி 69 படத்தோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் தற்போது எந்த அளவுக்கு அவர் தீவிர ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது வருண் சக்கரவர்த்தி தன்னுடைய கையில் தலைவா ஸ்டைலில் இருக்கும் தளபதி போட்டோவை கையில் டாட்டூவாக குத்தியுள்ளார். வருண் சக்கரவர்த்தி வலை பயிற்சி ஈடுபட்டிருக்கும் போது ரசிகர்கள் இதனை கவனித்து ஃபோட்டோ எடுத்துள்ளனர். மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.