தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட்‌ அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு தற்போது மத்திய அரசு பத்மபூஷன் விருதினை அறிவித்துள்ளது. மேலும் கலை துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.