
பாலிவுட்டின் பிரபல நடிகரான விக்கி கவுசல் நடிக்கும் திரைப்படம் சாவா. மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சாம்பாஜி என்பவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சாவா.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா சாம்பாஜியின் மனைவியாக மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் படத்தின் இயக்குனரான லக்ஸ்மன் உடேகர் ராஷ்மிகாவை இந்த படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
“ராஷ்மிகா மந்தனா எந்த கதாபாத்திரத்தையும் அருமையாக நடிக்க கூடியவர். அவரது உடல் மொழி எல்லா கதாபாத்திரத்திற்குமே பொருத்தமாக இருக்கும். இந்த படத்திலி நான் அவரை தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம் எனக் கூறியுள்ளார்.