
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். நடிகை திரிஷாவுக்கு 40 வயது கடந்துவிட்ட போதிலும் இன்னும் ஹீரோயினாக ஜொலிக்கிறார். நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு நடிகர் சூர்யா, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர்களுடன் சேர்ந்தும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் பிசியான நடிகையாக இருக்கும் திரிஷா சினிமாவை விட்டு விலக இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அதோடு சினிமாவை விட்டு விலகி விட்டு அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் திரிஷாவின் தாயாரிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு த்ரிஷாவின் தாயார் என்னுடைய மகள் தொடர்ந்து சினிமாவில் தான் நடிப்பார் என்றும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் எனவும் திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் திரிஷா அரசியலுக்கு வருவதாக வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை எனவும் கூறினார்.