
மலேசியாவை சேர்ந்தவர் ஷாசாலி சுலைமான் (28). இவர் திரைப்படங்களில் வருவது போன்று நிஜத்தில் வில்லனாக நடித்து அதற்காக பணம் சம்பாதிக்கிறார். அதாவது காதலி மற்றும் மனைவி முன்பு ஹீரோவாகுவதற்கு இவரை அணுகலாம்.
இவர் உங்களுக்காக நான் வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ளார். அதாவது காதலி மற்றும் கணவன் இல்லாத நேரத்தில் பெண்களை பின்தொடர்ந்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து பின்னர் கணவன் மற்றும் காதலன் வரும்போது அவர்களிடம் அடிவாங்கி பெண்கள் முன்னிலையில் உங்களை ஹீரோவாக்குவேன் என்று கூறியுள்ளார்.
இவர் நாடகம் மாதிரி நடத்தி அதற்காக பணம் வாங்குவார். இதற்காக ஆண்கள் மட்டும் என்று பெண்கள் கூட இவரை அணுகலாமாம் வில்லனாக நடிப்பாராம். மேலும் இதற்காக இவர் வார நாட்களில் 1975 ரூபாயும், வார இறுதி நாட்களில் 2,963 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறார்.