
உத்திரபிரதேச மாநிலத்தில் உண்ட ஹன்ஹயா (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்துவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி கை கழுவி விட்டு வந்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் பசி அதிகமாக இருந்ததால் அதனை ஏற்காமல் கை கழுவாமல் அப்படியே சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென விவசாயி மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.