
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சீமானை கலாய்த்து தள்ளியுள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது, நானும் ஒரு அரசியல் தலைவர் என சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டில் ஒருவர் திரிந்து கொண்டிருக்கிறார். திருக்குறளை திருவள்ளுவர் எழுதிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஓலைச்சுவடியை கொடுத்தது நான்தான். ஹிட்லருடன் சேர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளேன். காந்தியடிகளுடன் சேர்ந்து காபி குடித்தேன். சுபாஷ் சந்திர போஸ் பீரங்கி படையில் பயிற்சி கொடுத்துள்ளேன் என வாய்க்கு வந்ததை எல்லாம் அளந்து கொண்டே போவார். அவருடைய பெயரை இங்கே சொல்லி என்னுடைய மரியாதையை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.
ஆனால் அவர் சொன்னது சீமானைத்தான். சமீபகாலமாக சீமான் பெரியார் பற்றிய சர்ச்சையாக பேசி வரும் நிலையில் அவர் பிரபாகரன் சந்தித்தது போட்டோ எடுத்தது எல்லாம் பொய் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை எனவும் அவருடன் இருப்பது போன்ற போட்டோவை தான்தான் எடிட் செய்து கொடுத்தேன் என்றும் கூறினார். இதேபோன்று ஈழத்தை சேர்ந்த போட்டோகிராபர் அமிர்தாஸ் சீமானை பிரபாகரன் சில நிமிடங்கள் மட்டும்தான் சந்தித்தார் எனவும் மற்றபடி அவர் பிரபாகரனை சந்தித்தது அசைவ உணவு சாப்பிட்டது என்று கூறுவதெல்லாம் முற்றிலும் பொய் என்று கூறியுள்ளார். மேலும் சீமான் இப்படி அடுக்கடுக்காக கூறிவரும் நிலையில் அவரை கலாய்க்கும் விதமாகத்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.