தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தை சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து வருகிறார். SK25 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட இருந்தது. ஆனால் சில சூழ்நிலை காரணமாக படத்தின் டைட்டில் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று பட குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனிடையே படத்திற்கு பராசக்தி என்று தான் பெயர் வைத்திருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.