ஆப்பிரிக்கா நாட்டில் கிழக்கு நாடான காங்கோ, ஜனநாயக குடியரசில் சமீப காலங்களாக எம் 23 என்ற கிளர்ச்சி குழு தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களை கட்டுப்படுத்த ஆப்பிரிக்கா அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களை குறி வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்துகின்றனர். இதேபோன்று கடந்த வாரம் கோமா நகரில் சில கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை தாக்கியுள்ளனர் இந்த தாக்குதலில் ஐ.நாவின் அமைதிப்படை வீரர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முன்செஸ்க் சிறைச்சாலை உள்ள பகுதியில் கிளர்ச்சியாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது கிளர்ச்சியாளர்களுக்கும் , சிறை காவலாளிகளுக்கும் இடையே தகராறு நடந்தது. இந்த மோதலில் சிறையில் உள்ள கைதிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த கலவரத்தில் சிறையில் இருந்த 6000 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளதாக ஆப்பிரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.