
தெற்கு சூடானில் விமானம் கீழே விழுந்து நொறுக்கியதில், அதில் பயணித்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமானம் யூனிட்டி ஸ்டேட் என்ற இடத்திலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 21 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
அதில் 18 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீண்டும் 3 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை. தெற்கு சூடானில் விமான விபத்துக்கள் ஏற்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த 2018ம் ஆண்டில், ஜூபாவிலிருந்து யிரோலுக்குச்(Yirol) சென்ற சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 19பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது..