மனிதர்களே சாக்கடை மற்றும் மனித கழிவுகளை அகற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து பொதுநல மனுவை நீதிபதி விசாரித்தார். அப்போது மனித கழிவுகளை மனிதர்களை அகற்றுவது எப்படி? எப்போது? நிறுத்தப்பட்டது என்ற விவரங்களை பிப்ரவரி 13ம் தேதிக்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.

இதனை நாடு முழுவதும் உள்ள நகராட்சி மாநகராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளவும், மனிதர்களைக் கொண்டு சாக்கடைகளை அள்ளவும் தடை விதித்து, இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.