தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதி தெற்கு மேட்டில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் குமார் பக்கத்து வீட்டுப் பெண் குளியல் அறையில் குளித்து கொண்டிருந்ததை பார்த்தார். உடனே செல்போனில் அவர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.

இதனால் குமார் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த குமாரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குமார் முன்னாள் ராணுவ வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.