
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெஞ்சமின் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சுனிதா (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 19 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய மனைவியின் விருப்பத்தின் பேரில் சொந்த ஊரிலிருந்த வீட்டை விட்டு மணக்காவிளை பகுதியில் புதிதாக வீடு கட்டினர். அதன் பிறகு சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் வெளிநாட்டில் இருந்த அவருடைய கணவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுனிதா வீட்டிலிருந்து திடீரென மாயமான நிலையில் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெஞ்சமின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தன்னுடைய மனைவி காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென வீட்டில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் இறப்பதற்கு முன்பாக பதிவு செய்த ஒரு வீடியோ சிக்கியது.
அந்த வீடியோவில் போலீஸ் சூப்பிரண்டு ஐயா அவர்களே, நான் 19 வருடங்களாக என்னுடைய மனைவியை ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் என்னை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்று விட்டாள். அந்த கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள். என்னுடைய மனைவியின் உறவினர் மற்றும் வக்கீல் ஆகியோர் என்னை மிரட்டினார்கள். அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுங்கள். நான் அதை மேலே இருந்து பார்ப்பேன். என்னை கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு மனைவியின் கள்ளக்காதலன் கொண்டு விட்டான். அவனை மட்டும் தயவுசெய்து சும்மா விடாதீர்கள். தயவுசெய்து அவரை சும்மா விடாதீர்கள் போலீசும் இரண்டு அய்யா என்று கூறி அவர் கதறி கதறி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறார். மேலும் இந்த வீடியோவை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.