டெல்லி, ஹைதராபாத் பகுதியில் பாயும் யமுனை நதி அதிக அளவு இரசாயன கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, யமுனை நதியில் ஆளுங்கட்சியான ஹரியானா பாஜக ஆட்சி தொடர்ந்து அதிக அளவு நச்சு கலந்து மாசடைய விட்டுள்ளனர் என குற்றச்சாட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து பாஜக அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் அளித்தது.

இந்த புகாரின் பேரில் கெஜ்ரிவாலுக்கு பாஜக  மாசடைய செய்தது குறித்து ஆதாரங்களை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சித் தலைவருமான, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சவால் ஒன்றை விடுத்துள்ளார். இதில் கிழக்கு டெல்லி பாவாணர் பகுதியில் பிரச்சார கூட்டத்தின் போது ராகுல் காந்தி கூறியதாவது, கெஜ்ரிவால் அவர்கள் தேர்தலின் போது யமுனை ஆற்றை தூய்மைப்படுத்துவேன் என வாக்குறுதி அளித்து இருந்தார்.

மேலும் தூய்மை செய்து ஆற்றின் நீரை குடிப்பேன் எனவும் உறுதியளித்தார். அவர் கூறியதைப் போலவே யமுனை நீரை குடிக்க நான் அவருக்கு சவால் விடுகிறேன். நீங்கள் யமுனை நதியின் தண்ணீரை குடியுங்கள், பிறகு உங்களை நான் மருத்துவமனையில் வந்து சந்திக்கிறேன். ஒரு ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தினார் கெஜ்ரிவால் என அதிரடியான சவாலை விடுத்தார்.